Press "Enter" to skip to content

எத்தேர்தல்களிலும் பெரமுன வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றும்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதத்துடனான ஜனாதிபதியும்இ பொதுஜன பெரமுனவின் பிரதமரும் ஆட்சியில் உள்ளார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் கடந்த 24 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவில்லை. வெகுவிரைவில் அவர் இலங்கைக்கு வருகை தருவார். அரசியலில் மீண்டும் பிரவேசிப்பதாக கோட்டபய ராஜபக்ஷ இதுவரை கட்சியிடம் குறிப்பிடவில்லை. பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிக பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளது. ஆகவே சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம். மக்கள் வெறுக்கும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை. பொதுத்தேர்தலில் மாவட்ட மட்டத்தில் அதிக வாக்குகளை பெற்ற தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் தான் தற்போதும் ஆட்சியில் உள்ளது. பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதத்துடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிஇ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பிரதமர் என பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் தான் அமுலில் உள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளதாக ஒருசிலர் குறிப்பிடுவது தவறானதொரு கருத்தாகும். இனிவரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தல்களிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுஇ ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தும். தனி நபரை இலக்காக கொண்டு 22 ஆவது திருத்தத்தில் கொண்டு வரும் ஏற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க முடியாது. நாட்டுக்கு சாதகமாக அமையும் விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம் என சாகர காரியவசம் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *