யாழ்.கீரிமலை இராணுவ முகாமில் பணியாற்றிய 38 வயதான இராணுவ சிப்பாய் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதி காய்ச்சல் காரணமாக கீரிமலை இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த சிப்பாய்,
பின்னர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கடந்த 25ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
Be First to Comment