கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான இயந்திர உபகரணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துலையாடினார்.
வார விடுமுறை தினமான இன்று அமைச்சு அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடயே
தனியார் முதலீட்டாளர்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை தரச் சான்றிதழ் செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற்ருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment