மே 9 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் கிரிந்திவெல, ஊராபொல மற்றும் லிஹினியாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 53, 26 மற்றும் 30 வயதுடையர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்





Be First to Comment