நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இதன்படி, 300 மெகாவொட் மின்சாரம், தேசிய கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாம் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான, பின்னணியில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்தடை அமுலாக்கப்படும் காலம் குறித்து அறியப்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்துண்டிப்பு கால அளவில் திருத்தம் செய்து விரைவில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மின்துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment