யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தார் என தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் முதன்மை சந்தேக நபரே நீண்ட நாள்கள் தேடப்பட்டு வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
Be First to Comment