Press "Enter" to skip to content

வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வந்த இரு சிறுமிகள் மீட்பு

பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில், வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வந்த இரு சிறுமிகளை மெதிரிகிரிய பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

09 மற்றும் 04 வயதுகளையுடைய சிறுமிகளையே பொலிஸார் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளனர்.

சிறுமிகளின் தாயார் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தனது கணவரையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் தந்தையின் அரவணைப்பில் சிறுமிகள் வளர்ந்து வந்துள்ளனர்.

சிறுமிகளின் பாட்டி குறித்த வீட்டிலேயே வசித்து வரும் நிலையில் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டியை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த சிறுமிகளே ஏற்றுள்ளனர்.

சிறுமிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமிகளின் நிலைமைகளை அவதானித்த அவர்களை தங்களது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறித்த வீடானது மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டதாகவும் சிறுமிகள் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் அந்த வீட்டில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.

உணவின்றி இருந்த சிறுமிகளுக்கு உணவை பெற்றுக்கொடுத்துள்ள பொலிஸார் ஆடைகள், கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *