சந்தையில் ஏற்பட்டுள்ள கோதுமைமா தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலத்தில் பாண் ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பல வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை ஏற்படும்.
நாட்டுக்கு தேவையான கோதுமை மாவில் 50 சதவீதமான மாவையேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள மா நிறுவனங்களுக்கு கோதுமை விதையை கொண்டுவருவதற்கு அவசியமான டொலர் கிடைப்பதில்லை என தெரிவித்து அந்த நிறுவனங்களின் உற்பத்தி செயற்பாடுகள் 50 சதவீதத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வெதுப்பக உரிமையாளர்களும் நுகர்வோரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Be First to Comment