ஊழல் மோசடிகளை நிறுத்தவும் மின்கட்டணத்தை குறைக்கவும்’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சியானது, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இன்று (29) காலை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, மனோ கணேசன், கயந்த கருணாத்திலக்க, லக்ஷ;மன் கிரியெல்ல, நளின் பண்டார, சமிந்த விஜேசிறி உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ‘ஊழல் மோசடிகளை நிறுத்தவும் மின்கட்டணத்தை குறைக்கவும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகையை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
Be First to Comment