பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் வினைத்திறனாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 4 நாட்களில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அதிகளவான கையிருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊடாக நாளாந்தம் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, பஸ்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
மேலும் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் 92 இன்றிரவு இறக்கப்பட உள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment