Press "Enter" to skip to content

தலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்!

மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் எனக் கூறி நடு ரோட்டில் ஓட்டம் பிடிக்கவே மணப்பெண் அவரை துரத்தி பிடித்து திருமணம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தலைதெறிக்க ஓடிய மணமகனை  துரத்திப்பிடித்து  தாலிகண்டிக்கொண்ட மணமகள்! | Bride Chased The Bridegroom Who Ran Away

 

அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்துடன், இதையடுத்து வரதட்சணையாக பைக் மற்றும் ரூ.50,000 ஆயிரம் ரொக்க பணம் என்பனவும் கொடுத்துள்ளனர்.

எனினும் அந்த இளைஞர் திருமண திகதியை தள்ளிபோடுமாறு கூறியதனால் அவர்களது திருமணம் பிற்போடப்பட்டது. பின்னர் திருமண தேதி நெருங்கவே திருமணத்தை தாமதப்படுத்துமாறு இளைஞரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.

தலைதெறிக்க ஓடிய மணமகனை  துரத்திப்பிடித்து  தாலிகண்டிக்கொண்ட மணமகள்! | Bride Chased The Bridegroom Who Ran Away

சந்தைக்கு வந்த மணமகன்

 

இந்த நிலையில் அந்த இளைஞருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு மணமகனை பார்த்த நிச்சயிக்கப்பட்ட பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் கூட்டம்கூட மாப்பிளை தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மாப்பிள்ளையை விடாமல் துரத்தி வளைத்து பிடித்தார்.

தலைதெறிக்க ஓடிய மணமகனை  துரத்திப்பிடித்து  தாலிகண்டிக்கொண்ட மணமகள்! | Bride Chased The Bridegroom Who Ran Away

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இருதரப்பினரையும் பொலிஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து மாப்பிள்ளை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே இருவருக்கும் திருமணம் கோவிலில் நடைபெற்றது.

இந்நிலையில் நடுரோட்டில் ஓட்டமெடுத்த மணமகனை, மணப்பெண் துரத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *