பெற்ற மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபரியாத்(55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவரான ரேஷ்மா (21) எனும் இளம்பெண்ணுக்கு வரும் செப்டம்பர் 4 ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமண வேலைகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
பசியில் இருந்த அவர் மகளிடம் உணவு எடுத்து வர கோரியுள்ளார்.
அப்பொழுது தாமதமாக உணவு எடுத்து வந்ததால், மகளை சத்தம் போட்டுள்ளார். மகளும் பதிலுக்கு பேசியநிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முகமது ரேஷ்மாவை கோபத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ரேஷ்மா படுகாயத்துடன் மயங்கி வீழே விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், தந்தை முகமதுவையும் கைது செய்துள்ளனர்.
முகமது மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
அடுத்த வார திருமண கனவுடன் இருந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment