நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பதி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கேபிஎஸ் குமாரசிறி ஆகிய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர உள்ளனர்.
இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது
Be First to Comment