அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத் துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடனை மறுசீரமைத்தல் போன்ற கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை” என இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் புதுடில்லியில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் பண்ணை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை மற்றும் இந்தியா விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீன கப்பல் விடயத்தில் ஏற்பட்டதை போன்ற நிலையை தடுக்க இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அனைத்து விடயங்களில் ‘தெளிவான உரையாடல்’ தேவை என்பதை மொரகொட இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment