தற்போது நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். .
இன்று வர்த்தக அமைச்சில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்பிடித் துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
கைத்தொழில் துறைக்கு தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment