பொருளாதார நெருக்கடியினால் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் சிலரும் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்திருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தொிவித்திருக்கின்றார்.
மேலும் போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Be First to Comment