பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிரணியில் இணைந்து கொண்டனர்.
இந்நிலையில் அவர்களை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு சுயாதீனமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.
அதன்படி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமன, கே.பி.எஸ் குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, மருத்துவர் உபுல் கலப்பத்தி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.
Be First to Comment