வடமாகாணத்தில் பிரதேச சபைகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றிய சுமார் 40 நிர்வாக சேவை சிறப்புத்தர உத்தியோகத்தர்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேனவினால் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றத்தில் பிரதேசசபைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் சமூக சேவை திணைக்களம் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் நிர்வாக உத்தியோத்தர் சிறப்பு தர உத்தியோதர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டது.
குறித்த இடமாற்றம் கடந்த ஐந்தாம் மாதம் வழங்க எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதேச சபைகளுக்கான செயலாளர்களை நியமிப்பதில் உத்தியோத்தர் பற்றாக்குறை காணப்பட்டது. இந்நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்களை
எதிர்வரும் 5ஆம் திகதி முன்னர் கடமைகளை பொறுப்பேற்குமாறு வட மாகாண பிரதமர் செயலாளரினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Be First to Comment