Press "Enter" to skip to content

வவுனியாவில் கோதுமை மாவு 420 ரூபா

வவுனியா மாவட்டத்தில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

இன்றைய கறுப்புச்சந்தையில் கோதுமை மா ஒரு கிலோ 420 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

வவுனியா கறுப்புச்சந்தையில் உச்சம் தொட்ட கோதுமை மாவின் விலை! | Price Of Rise Wheat Flour In Vavuniya Black Market

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதேவேளை, கோதுமை மாவுக்கான இறக்குமதிகள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றன.

 

வவுனியா கறுப்புச்சந்தையில் உச்சம் தொட்ட கோதுமை மாவின் விலை! | Price Of Rise Wheat Flour In Vavuniya Black Market

இறக்குமதியாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்களுக்கு கோதுமை மா விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் இன்றைய நிலையில் கறுப்புச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *