உறவினர் வீடொன்றில் அந்தியோட்டி கிரிகைக்காக சென்றிருந்த பெண்ணை தாக்கி 5 பவுண் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரிக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு அந்தியேட்டி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக பேருந்தில் சென்று,
பேருந்துவில் இருந்து இறங்கி கிளை வீதியூடாக சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
பெண்ணின் சங்கிலியை அறுப்பதற்கு முயற்சித்தனர். உடனே அந்தப்பெண் சுதாரித்துக் கொண்டு அவர்களில் ஒருவர் மீது கையால் அறைந்தார்.
உடனே அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment