ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளை பராமரிக்கத் தேவையான என்ஜின் ஒயில் இல்லாததால் தினமும் சுமார் இருபது ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார்.
மேலும், இன்ஜின் மற்றும் வண்டிகளின் பராமரிப்புக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் இல்லாததால், குறிப்பிட்ட காலத்துக்குள் பழுதுபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஐம்பது சதவீத என்ஜின்கள் ஆபத்தில் இருப்பதாகவும் கூறினார்.
Be First to Comment