இரத்மலானை பிரதேசத்தில் தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி மகன் கொலை செய்துள்ளார்.
தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரான மகன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
70 வயதுடைய தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தாயும் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த தந்தை சுமார் இரண்டு வருடங்களாக சுயநினைவின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான மகன் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
Be First to Comment