உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்குதுறை மற்றும் மீன் சந்தை ஆகியவை அமைக்கப்பட்டுள்ள பிரதேசம், தனியார் இருவரினால் தமது பூர்வீக காணி என்று உரிமை கோரப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக நேரடியாக ஆராய்ந்தார்.
வர்த்தக அமைச்சர் நளின் பெனான்து, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், எதிர்வரும் செவ்வாய் கிழமை கடற்றொழில் அமைச்சில் விரிவான கலந்துரையாடலை நடத்தி எந்தத் தரப்பினரும் பாதிப்பில்லாதவாறு தீர்மானத்தினை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
Be First to Comment