கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணியிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஏனெனில் கோதுமை மா தொடர்பிலான மாபியா செயற்பட்டு வருவதாகவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாணின் விலை 300 ரூபாயை அண்மித்துவிட்டது.
கோமை மாவின் விலையை கட்டுப்படுத்துமாறு நான் கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்கூட தெரிவித்து இருந்தேன். ஏனெனில், கோதுமை மா தொடர்பிலான மாபியா ஒன்று செயற்பட்டு வருகின்றது. 310 ரூபாய்க்கு கோமை மா விற்பனை செய்யப்படுகின்றது என்பதையும் நான் கூறினேன்.
இன்று கோதுமைமாவின் விலை 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.
கோமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான இரு நிறுவனங்கள் காணப்படுகின்ற போதிலும் வேறு சில தரப்பினரும் கோமை மாவை இறக்குமதி செய்து தாங்கள் நினைத்த விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்தத் தட்டுப்பாட்டுடன் கோதுமை மாவை 400 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
ஒரு மூட்டை கோதுமை மா 20,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
20,000க்கு ஒரு மூட்டை கோதுமை மாவை வாங்கி பாணை 300 ரூபாய்க்கு விற்பனை செய்வது சாதாரண விடயமே.
கோதுமை மாவை நம்பியே ஹோட்டல் துறை செயற்படுகின்றது.
சிறியளவிலான பெட்டிகடை முதல் பாரியளவிலான ஹோட்டல் வரை கோதுமை மாவை நம்பியே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு இறாத்தல் பாண் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமானால் கொத்துரொட்டியின் விலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது
Be First to Comment