சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை என்பதுடன் குறித்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சாமியார் நித்தியானந்தா ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment