வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருந்தோர் அவற்றை செலுத்திவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்திற்கு மேலதிகமாக செலுத்தவேண்டும். எனவும் அறிவித்துள்ளது.
Be First to Comment