யாழ்ப்பாணம் வலிகாமம் சிறுப்பிட்டியின் சந்திக்கு அருகாமையில் இன்று (04) மாலை 05.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் மற்றும் மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது…
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
Be First to Comment