ஹல்துமுல்ல, உடவேரிய தோட்டத்தில் செல்ஃபி எடுக்கும்போது இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட பின் அவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்ற போது தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வீழ்ச்சிக்கு கீழே 200 மீற்றர் ஆழத்தில் உயிரிழந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செல்ஃபியால் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment