தொலைபேசி மற்றும் இணையத்தள சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது வர்த்தக நடவடிக்கைகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக, அகில இலங்கை தொலைத்தொடர்பு வரத்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டண அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக தமது வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கைபேசி, நிலையான தொலைபேசி, இணையத்தள மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்காரணமாக தமது தொழிற்துறை எதிர்காலத்தில் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தொலைத்தொடர்பு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்ரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்
Be First to Comment