பிரித்தானியாவில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பகோரா’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்திய உணவு வகைகளில் ஒன்றான “பக்கோடா” தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் குழந்தைக்கு இப்பெயரை சூட்டியதாக தம்பதி விளக்கம் அளித்துள்ளனர்.
மழைக்காலங்களில் தேநீருடன் ரசித்து உண்ணும் பக்கோடா தான் பகோரா. இந்த தம்பதி அயர்லாந்தில் உள்ள உணவகத்தில் அடிக்கடி பக்கோடா வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்.
அதன் சுவையால் ஈர்க்கப்பட்ட அந்த பெற்றோர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பகோரா என பெயர் வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த தம்பதி தெரிவிக்கையில்,
தங்களுக்கு பக்கோடா பிடிக்கும் என்பதால் குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இதை அறிந்த அந்த உணவகம் அந்த தம்பதிக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இந்திய உணவுகளில் ஒன்றான பக்கோடாவின் பெயரை பிறந்த குழந்தைக்கு வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment