புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர், கோட்டபாய ராஜபக்சவின் கீழ், சுமார் இரண்டரை வருடங்களாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கென தனியான அமைச்சரவை அமைச்சர் இல்லை, என்பதோடு இந்த விடயம் ஆண் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் குறித்து நடைமுறை புரிதல் இல்லாத ஆண்களுக்கு இந்த அமைச்சை ஒதுக்குவது அர்த்தமற்ற செயல் என சுட்டிக்காட்டிய பிரதமர், அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போதே பிரதமர் தினேஸ் குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண் ஒருவருக்கு வழங்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment