யாழில் காலில் முள்ளுக் குத்தியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி அவருக்கு முள்ளு குத்தியுள்ளது.
காலில் கொதி வலியாக இருப்பதாக அனலைதீவு வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கிருந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
Be First to Comment