நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இது 100 முதல் 200 வரை விலை குறைப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
லிட்ரோ எரிவாயு 100 ரூபா விலை குறைப்பு.?
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment