நாளை முதல், மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என, உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
எரிவாயு விலை, நாளை குறைவடையும என லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
எரிபொருளின் விலையை குறைத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவதை, முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.
கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும், நகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு, குறித்த நன்மை கிடைப்பதில்லை.
இதன் காரணமாக, ஒட்டு மொத்தமாக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது.
‘சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது என்பதற்காக, உணவுப் பொருட்களின் விலையை, எந்த வகையிலும் குறைக்க மாட்டோம்.
ஏனென்றால், அன்று சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட போது, தேனீர் விலையை 30 ரூபா குறைப்பதாகச் சொன்னோம்.
உணவு விலையை 10 சத வீதத்தால் குறைப்பதாக கூறினோம்.
எனினும், நகரத்தின் பொருட்கள் விலைகளை கிராமத்துக்கும் வழங்க கூறினோம்.
ஆனால், அது நடக்கவில்லை.
உண்மையில் பருப்பு 410 ரூபா.
ஆனால் கிராமத்தில் இன்னும் 600 ரூபா என்பதனால், 200 ரூபா அதிகம்.
அந்த 200 ரூபா, கிராமத்தில் உள்ள ஹோட்டல்களை பாதிக்கிறது.
இன்று, அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்பு 250 ரூபா.
இது ஒரு தீவிர பிரச்சனையாகும்.
சமையல் எரிவாயு விலை குறைந்தாலும், உணவின் விலையை குறைக்க முடியாது.
ஏனெனில், சமையல் எரிவாயு விலை மட்டும் அல்ல, மற்ற பொருட்களின் விலையும் குறைந்துள்ளது என்பதை, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை, வர்த்தகர்கர்கள் தீர்மானித்துக் கொள்வதால், பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து செல்கின்றன.
இதனால், விலைக்குறைப்பின் நன்மை, கிராம மக்களுக்கும் கிடைக்க, முறைமை ஒன்று உருவாக்கபட வேண்டும்.
என உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment