உக்ரைன் – ரஷ்ய போரைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும், ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போருக்கு இடையே, தன்னை மிரட்ட, ரஷ்யா, எரிவாயுவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என, ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரி செய்யப்படும் வரை, நோர்ட் ஸ்ட்ரீம்-1 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என, ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் அறிவித்தது.
அந்தக் குழாய், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் இருந்து, பால்ட்டிக் கடல் வழியாக, ஜேர்மனி வரை செல்கிறது.
தற்போது, போதுமான அளவு எரிவாயு இருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜேர்மனியின் தலைநகர் பெர்லின், அந்த நிலைமை மோசமடையும் சாத்தியம் உள்ளதையும் மறுக்கவில்லை.
Be First to Comment