தொலைபேசி சேவைக் கட்டண 20% அதிகரிப்பு நாளை (05) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா,
“49 ரூபாய் மீள்நிரப்பு அட்டை 59 ரூபாய் ஆகும். 99 ரூபாய் மீள்நிரப்பு அட்டை 119 ரூபாய் ஆகும். கடைக்குப் போகும் போது புதுத் தொகையைக் கேட்டுக் கொள்ளுங்கள். பழைய தொகையை ரீலோட் பண்ணினால் உங்களுக்குத் தேவையான பேக்கேஜ்கள் கிடைக்காது. அரசாங்கத்திற்கு நாம் சுமை இல்லை. அரசாங்கம் எமக்கு சுமையாக உள்ளது. இந்த சுமையை தரையில் இறக்கி வைப்போம். இந்த சுமையை எப்போதாவது தரையில் அடிப்போம்.”
Be First to Comment