உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்தில் அமைக்கப்படடுள்ள மீனவர் இறங்கு துறை மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள காணி விவகாரம் தொடர்பாக நிலவி வருகின்ற நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
சம்மந்தப்பட்ட காணி தனியார் சிலரினால் உரிமை கோரப்பட்டு வருகின்ற நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்படுள்ளது. இதுதொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் நேரடிக் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில், வர்த்தக அமைச்சர் நளின் பெனார்ந்து, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்கள் கலந்துகொண்டன
Be First to Comment