நீர்கொழும்பு களப்பு சார்ந்த பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து காரணமாக மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பேர்ள் எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக சுமார் 18 நாட்கள் தொழில் செய்வதற்கு தடைசெய்யப்பட்டிருந்தனர். அதற்காக இதுவரை இரண்டு கட்ட நஸ்ட ஈடு கிடைத்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட நஸ்ட ஈட்டினை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment