ஐக்கிய தேசிய கட்சி இன்றுடன் 76 ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள், கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 1946ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அந்த கட்சி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியது. இலங்கையின் முதலாவது பிரதமராக டி.எஸ்.சேனநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இன்று இடம்பெறவுள்ள 76ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு விழா இன்று
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment