நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட ஆளொருவரின் மேன்முறையீட்டைக் கருத்தில் கொள்ளும் போது அந்நபர் தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதி அல்லது அதன் ஒரு பகுதியை அவரது தண்டனைக் காலத்தின் ஒருபகுதியாக கணிப்பிடுவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது மிகவும் பொருத்தமானதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட அலகின் குற்றவியல் உபகுழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 323(5) ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Be First to Comment