கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்த அடைமழையால் கேகாலை மாவட்டத்தில் அவிசாவளை கேகாலை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அங்குருவெல்ல, ருவன்வெல்ல நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குருவெள்ள நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு நீர் புகுந்து இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு
அங்குருவெள்ள குருகொடை ஆறு மற்றும் ரிடி கஹ ஆறு என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் இந்நிலை உருவாகியுள்ளது.
இதனால் இதன் அண்டிய கன்னந்தொட்டை, அங்குருவெல்ல, ருவன்வெல்ல பிரதேச மக்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். அத்துடன் பல வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய கட்டிட ஆய்வு மையத்தால் எட்டியாந்தோட்டை, புளத்கோபிட்டிய, கேகாலை, கலிகமுவ, மாவனல்லை, ரம்புக்கன மற்றும் வரக்காபொல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் களனி ஆறும் பெருக்கெடுத்து இருப்பதால் அதன் அண்டிய பிரதேச மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Be First to Comment