யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்துடைய விளையாட்டு அரங்கில் யாழ் வணிகர் திருநாள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட தீயணைப்பு இயந்திரத்திற்கான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் யார் மாணவர் சபை உறுப்பினர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் தீயணைப்பு படை பிரிவு உத்தியோர்கள் கலந்து கொண்டனர்
கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு படை வாகனம் விபத்தில் முற்றாக சேதம் அடைந்திருந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையின் பாவனையில் இருந்த தீயணைப்பு இயந்திரம் செயலிழந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தினரால் பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் எந்த உதவியும் வழங்கப்படாதவிடத்தில் சொந்த முயற்சியின் பயனாக கொடையாளி ஒருவரின் பங்களிப்பில் 2 கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டு யாழ் மாநில சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்கப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் தீயணைப்பு படை தீயணைப்பு வாகன அறிமுக நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Be First to Comment