தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிமட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடுஎன்றால் ”மல்லி” சாணக்கியனின் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களைப் பிடித்த ”தரித்திரம்”என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிள்ளையான் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனது சக எம்.பி.யான ”மல்லி” சாணக்கியன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் என்னுடைய பெயரையும் இழுத்துப் பேசியிருந்தார். ”மல்லி”சாணக்கியனுக்கு இதற்கு பதில் கொடுக்க நான் விரும்பாது விட்டாலும் கூட ”பிள்ளையான் ஏன் அமைதியாக இருக்கின்றார்”என எனக்கு வாக்களித்த பெருவாரியான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கேட்பதனால் நான் அவருக்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டை அழிக்க , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் ஏந்த அடித்தளமிட்டவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியினர்.
பிள்ளையான் கடும் சினம்
இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என ”மல்லி”சாணக்கியன் கூறியிருந்தார்.
அவருக்கு தெரியுமோ தெரியாது அவரின் பாட்டனார் ”மட்டக்களப்பு மாவட்டத்திலே பாலம் கட்ட வேண்டாம் சிங்களவன் வந்து விடுவான், கிராமங்களிலே குளம் அமைக்க வேண்டாம் சிங்களவன் குடியேறி விடுவான். உங்கள் பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிக்க வேண்டாம் தனியே தமிழ் மட்டும் கற்பித்தால் போதும் ”என்று கிராமம் கிராமமாக போய் முழங்கியவர் .
அப்படி முழங்கி விட்டு ஈற்றிலே அவரின் வாரிசுகள் ஆங்கிலமும் சிங்களமும் மட்டுமே நன்றாக பேசுகின்றனர் படிக்கின்றனர்.
அத்துடன் இந்த சபையிலே சிங்கள பத்திரிகையை அழகாக வாசித்த சாணக்கியனுக்கு வீரகேசரி பத்திரிகையை படிக்க முடியாத நிலையை உருவாக்கிச் சென்றுள்ளார்.
இது உங்களின் கட்சிக்காரர் செய்த சாபக்கேடு எனவும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்
Be First to Comment