Press "Enter" to skip to content

தமிழ் தெரியாமல் அசிங்கப்படுகின்றேன்! அமைச்சர்

பல மொழிகள் பேசப்படும்  இந்த நாட்டில், என்னால் சிங்களம் மட்டும் பேச முடியுமென்பதை நினைத்து வெட்கமடைகின்றேன் என அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நான் வாழ்கின்ற பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கிறது.

 

இலங்கையில் தமிழ் தெரியாமல் அசிங்கப்படுகின்றேன்! அமைச்சர் | Sri Lanka Without Knowing Tamil Language Manusha

ஆனால் என்னால் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச முடியும். வணக்கம் நன்றி போன்ற வார்த்தைகளை குறிப்பிடலாம்.

இலங்கையில் ஒரு இனப் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. நான் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. எம்மிடம் காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

 

இலங்கையில் தமிழ் தெரியாமல் அசிங்கப்படுகின்றேன்! அமைச்சர் | Sri Lanka Without Knowing Tamil Language Manusha

தொடர்பாடல் இடைவெளி இருந்ததால் நாம் நெருங்கிவரவில்லை. எம்மால் தொடர்புகளை ஏற்படுத்தமுடியுமாக இருந்தால் அந்த பிரச்சினை வந்திருக்காது.

இந்த நெருக்கடிகள் மொழி தொடர்பான தெளிவின்மை அறிவின்மை காரணமாகவே உருவாகின என தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *