Press "Enter" to skip to content

திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் கழுத்தறுத்து கொலை! தண்ணீரில் கிடந்த சடலம்

தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அந்த பெண் அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி (23) என்பது தெரியவந்தது.

செல்விக்கு மிக சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. அதன்படி செல்விக்கு கடந்த 31ம் திகதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மறுநாள் காலை அவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார்.

திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் கழுத்தறுத்து கொலை! தண்ணீரில் கிடந்த சடலம் | Newlymarried Women Killed Five Day Marriage

 

உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, ராம்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இசக்கி செல்வி ஊருக்கு வந்து தனது சித்தியின் வீட்டில் தங்கியுள்ளாா். மேலும், தன்னை வெங்கடேஷுடன் சோ்த்து வைக்குமாறு தனது தம்பி ஆனந்திடம் கூறினாராம்.

இதையடுத்து, ஆனந்த் தனது நண்பா் சிவாவுடன் சோ்ந்து இசக்கி செல்வியை வெளியே அழைத்துச் சென்றாராம். இந்நிலையில், தான் ஓடையில் இருந்த தண்ணீரில் இறந்து கிடந்தாா். இதையடுத்து பொலிசார் ஆனந்த், சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *