அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமையும் பட்சத்தில் மாத்திரமே அரசாங்கத்தின் பதவிகளை ஏற்று ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தீர்மானங்களுக்கு முரணாக அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமது சொந்த நலனுக்காகவே அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டார்.
Be First to Comment