நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தொடர் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணியினரால் நடைபெறவுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 10ஆம் திகதி காலை, காங்கேசன்துறை வீதி மாவிட்டபுரத்தில் ஆரம்பமாகும்.
இதன் பின்னர், பங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெறும்.
அதன் பின்னர் ஊர்திப் பவனி மாவட்டங்களிற்கு சென்று, அந்தந்த மாவட்டங்களில் கையெழுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment