யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றினை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடச் செய்த காரணமாக இருந்த விடுதி இன்றைய தினம் சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்தியதாக பூட்டு கடை நாதன் என்பவருக்கு சொந்தமான நாதன் விடுதியே இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது. யாழ்ப்பாணம் போலீசாரினாள் கடந்த மாதம் குறித்த விடுதியில் இருந்து ஏழு சிறு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் சிறுவர் பிரிவு போலீசாரினால் மீட்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் குறித்த விடுதியினை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.
யாழ் ஐந்து சந்தியில்உள்ள தனியார் விடுதி ஒன்று சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவிப்பு
- ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்!
- கெஹெலியவின் மகனின் பெயரில் பல கோடி பெறுமதியான சொகுசு வீடுகள் – விசாரணை முடியும் வரை பயன்படுத்த நீதிமன்ற தடை
- சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை!
- வாக்களிக்க இவற்றை பயன்படுத்தலாம்!
Be First to Comment