Press "Enter" to skip to content

லஹிரு வீரசேகர வைத்தியசாலையில்!

காலி முகத்திடலில் நேற்று பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனை அடுத்து காலி முகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 30 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார்.
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ´வெனசகட தாருண்ய´ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகரவ இன்று காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்நீதவான் முன்னிலையில் லஹிரு வீரசேகரவ இன்று ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *