Press "Enter" to skip to content

சுன்னாகம் சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் இளம் பெண் தற்கொலை

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *